2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தொடருகிறார் கே.எல்.ராகுல்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்று வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அணிகளுக்கு இடையில் வீரர்களை டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் லக்னோ அணி முதல் வீரராக கே.எல்.ராகுலை தக்கவைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
லக்னோ அணியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக ராகுலை தக்க வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.