தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25, 26-ம் தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பிழை திருத்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதனால், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநிலக்கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் சேர்ப்பு முகாம் முன்பு வாக்காளர்களுக்கு உதவினர்.
இந்நிலையில், தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் சட்டமன்ற தொகுதியான, சென்னை திருவல்லிக்கேணியில், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், ஆட்டோவில் வந்துள்ளனர்.
இன்று நடைபெறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில், திருவல்லிக்கேணி அயோத்தியா குப்பத்தில் பணியில் இருந்த பாஜக நிர்வாகி சுறா சுமனை தாக்கியதோடு இல்லாமல், பெஞ்சு சேரை அடித்து உடைத்த திமுகவினரின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.@Bagavathprathee @annamalai_k @KesavaVinayakan pic.twitter.com/0GX7MvYgV7
— Kalaiselvy Srinivas (@kalaiselvys) November 26, 2023
இதை அறிந்து கொண்ட திமுகவினர், அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். பாஜக கொடியையும் கீழே போட்டு மிதித்து அவமதித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு திமுகவினரின் ரவுடித்தனத்தை அம்பலத்தித்தியுள்ளார்.
சென்னை காவல்துறை என்ன செய்யப்போகிறது?