சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த இதழ், வழக்கம் போல் இந்த ஆண்டும் சர்வேதச அளவிலான கோடீஸ்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், இத்தாலியைச் சேர்ந்த கிளமென்ட் டெல் வெக்சியோ என்ற 19 வயது இளைஞர் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த எஸ்ஸிலோர் லுக்சோட்டிகாவின் முன்னாள் தலைவர் லியோனார்டோ டெல் வெக்சியோவின் மகன்தான் இந்த கிளமென்ட்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லியோனார்டோ காலமானதை அடுத்து, அவரது ரூ. 2.12 லட்சம் கோடி சொத்து, அவரது மனைவி மற்றும் 6 பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் கிளமென்ட் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.