கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் புனித நிகழ்வு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மோடி வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நம்பிக்கை, பக்தி மற்றும் தெய்வீக வழிபாட்டின் இந்திய பாரம்பரியத்தால் கொண்டாடப்படும் புனிதமான பண்டிகைகளான கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
श्रद्धा, भक्ति और दैवीय उपासना की भारतीय परंपरा से प्रकाशित पावन पर्व कार्तिक पूर्णिमा एवं देव दीपावली की असीम शुभकामनाएं। मेरी कामना है कि यह पावन अवसर देशभर के मेरे परिवारजनों के जीवन में नई रौनक और स्फूर्ति लेकर आए।
— Narendra Modi (@narendramodi) November 27, 2023
இந்த இனிய நாள், நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியையும், உற்சாகத்தையும் அளித்திட விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.