இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ஆட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை காண்பிக்க தொடங்கினார்.
பௌண்டரியஸாக விளாசிய ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஹாட்ரிக் பௌண்டரீஸ் அடித்து ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். இப்படி அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்ராஜ் மற்றும் கிஷன் கூட்டணி ஆரம்பத்தில் ரன்களை குவிக்காமல் நிதானமாக விளையாடி வந்தது.
6 வது ஓவரில் இருந்து 12 வது ஓவர் வரை இந்திய அணிக்கு மிகவும் குறைந்த ரன்களே கிடைத்தது. பின்னர் 13 வது ஓவரில் இருவரும் தங்களின் அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் இருவரும் 44 ரன்களில் சமமாக இருந்தனர். யார் முதலில் அரைசதம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மைதானத்தில் இருந்த அனைவருக்கும் இருந்தது.
அப்போது சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் முதலில் தனது அரைசதத்தை அடித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் மொத்தமாக 3 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்தார். அப்போது ருத்ராஜ் தனது அரைசதத்தை பதிவு செய்ததன் மூலம் இந்தியா அணிக்கு தொடர்ந்து 3 அரைசதங்கள் பதிவாகியது.
பின்னர் சூர்யா 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ருத்ராஜ் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 43 பந்துகளில் 58 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அப்போது களமிறங்கிய ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தைக் காண்பிக்க தொடங்கினார். அவரை போலவே திலக் வர்மா தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்து 2 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார்.
ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் 2 சிக்சர்கள் என மொத்தமாக 9 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 1விக்கெட்டும் வீழ்த்தினர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேட் ஷார்ட் களமிறங்கினர்.
மேட் ஷார்ட் 3 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 19 ரன்களுடனும், அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 45 ரன்களும், மேத்யூ வேட் 42 ரன்களும் எடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.