திமுக இளைஞரணிச் செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் தமது 46-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, காவல்துறையினரின் சக்தி இன்று வீணடிக்கப்பட்டு உள்ளதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் பதிவில்,
2 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 90 சப் இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 380 தனிப்படை போலீசார் கோபாலபுரம் சியோனின் பிறந்தநாளான இன்று அவரது வீடு, சுற்றுப்புறம் மற்றும் அவரது வீட்டிற்குச் செல்லும் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 Deputy Commissioners, 10 Assistant Commissioners, 30 Inspectors, 90 Sub Inspectors, 300 police officers & 380 reserved police are the officers on duty to guard the house, periphery & the roads leading to Gopalapuram Scion’s house on his birthday today.
The Corrupt DMK Govt &… pic.twitter.com/4bh1mj7ZAY
— K.Annamalai (@annamalai_k) November 27, 2023
சாமானிய மக்கள் மாநிலத்தில் அராஜகத்தை விலை கொடுத்து வாங்குவதால், வம்சத்தை மட்டும் பாதுகாப்பதில் தங்கள் பொறுப்பு முடிந்துவிடாது என்பதை ஊழல் திமுக அரசும், தமிழகக் காவல்துறையும் உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.