தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.
தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 80 வயது நிரம்பிய முதியோர் வீட்டில் இருந்து வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சோதனை அடிப்படையில் ஹைதராபாத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அரசியல் கட்சிகள் வாரி வழங்கி வருகிறது.
குறிப்பாக, தங்கம், வெள்ளி, மடிக்கணிணி, வாகனங்கள் மற்றும் குக்கர், சேலைகள் என ரூ. 269 கோடியே 46 லட்சம் மதிப்புடன், மொத்தம் ரூ. 709 கோடி மதிப்பிலான பொருட்களைத் தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்துள்ளது.
குறிப்பாக, ரூ. 117 கோடியே 86 லட்சம் மதிப்பிலான மது பானங்களும், போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையுடன் வாக்கு சேகரித்து வருகிறது. மற்ற கட்சிகள் பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகிறது.