2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட சிஸ்கே வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் நவம்பர் 26 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூறியிருந்தது.
இந்த நிலையில் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகிய 8 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.
மேலும், தோனி, டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷாய்க் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மாண்டல், ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சிம்ரன்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.