கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு தாம்பரம், வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.