ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் பவள விழா ஆண்டில் டிசம்பர் 01 அன்று குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவரும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான திரௌபதி முர்மு, புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு (ஏ.எஃப்.எம்.சி) அதன் பவள விழா டிசம்பர் 01 வெள்ளியன்று குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குகிறார்.
ஏ.எஃப்.எம்.சி ஒரு முதன்மை ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (ஏ.எஃப்.எம்.எஸ்) நிறுவனமாகும் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். ஏ.எஃப்.எம்.சி.யின் 75 ஆண்டுகால தேசத்திற்கான முன்மாதிரி சேவைக்கு இந்த விருது ஒரு சான்றாகும்.
இந்தப் பிரமாண்டமான விழாவில் சிறப்பு உறை, அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயம் குடியரசுத் தலைவரால் வெளியிடப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதிநவீன சுகாதார ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் ஏ.எஃப்.எம்.சி.யை இணைக்கும் கணக்கீட்டு மருத்துவத்திற்கான ஆயுதப்படை மையமான ‘பிரஜ்னா’வையும் குடியரசுத் தலைவர் மின்னணு முறையில் திறந்து வைக்கிறார்.
ஏ.எஃப்.எம்.சி.யில் உள்ள கேப்டன் தேவாஷிஷ் சர்மா கீர்த்தி சக்ரா அணிவகுப்பு மைதானத்தில் இந்த கண்கவர் நிகழ்வு நடைபெறும்.
அணிவகுப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவை பணியாளர்களின் நான்கு பிரிவுகளுக்கு பெண் மருத்துவ அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள்.
இந்தப் புகழ்பெற்ற விழாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
முன்னாள் கமாண்டன்ட்கள், முன்னாள் டீன் மற்றும் துணை கமாண்டன்ட்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.