மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் அமீர் கசாப் உயிருடன் பிடிபட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக அசாம் முதலமைச்சசர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், “இது மிகவும் சோகமான நாள் என அவர் குறிப்பிட்டார். தீவிரவாத தாக்குதல் நடந்த நேரத்தில் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் எனறு அவர் கூறினார்.
மேலும் செய்ய வேண்டியதைச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படுவதாக கூறினார்.