கும்பகோணம் அடுத்துள்ள கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ளது கள்ளப்புலியூர். இதன் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முருகன். இவர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, அதிமுக ஆதரவுடன் ஊராட்சி மன்ற தலைவரானவர் முருகன். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.