குருநானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், சீக்கிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் பிறந்த தினம் இன்று குருநானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி புனிதத் தலமான அமிர்தசரஸ் உள்ளட்ட குருத்வாராக்களில் காலை முதலே சீக்கியர்கள் வழிபாட்டிற்காக குவிந்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் வழிகாட்டல் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உலகெங்கிலும் உள்ள ஏராளமானோருக்கு பலத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியின் போது அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.