கோவையில், முக்கியப் பகுதியை இணைக்கும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக, பாஜக தேசிய மகளீர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குற்றசாட்டுக்கு ஆதராமாக வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமது பக்கத்தில், மிகவும் மோசமான நிலையில் கோவையின் முக்கியப் பகுதியை இணைக்கும் சாலைகள்.
இதுகுறித்துப் பலமுறை சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பியபோதெல்லாம் முதலமைச்சர், ரூபாய்.200 கோடி வரை கோவையின் சாலைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்திருக்கிறார்.
இன்று வரை சாலை பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
எனவே மக்கள் மீது சிறிதேனும் அக்கறை எடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்பே சாலைப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசிற்குக் கோரிக்கைவைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.