இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சரை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்கே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி எதிர்பார்த்தப்படி சரியாக விளையாடவில்லை.
இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை, அதிபர் ரணில் விக்ரமசிங்கே கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதனையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்த ரோஷன் ரணசிங்கேவை நீக்கி அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.