இந்த நூற்றாண்டின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் புகழராம் சூட்டியுள்ளார்.
மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸில் ஜெயின் ஆன்மீகவாதியும் தத்துவஞானியுமான ஸ்ரீமத் ராஜ்சந்திராவின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, காந்தியை கடந்த நூற்றாண்டின் ‘மகாபுருஷ்’ என்றும், பிரதமர் மோடியை இந்த நூற்றாண்டின் ‘யுக்புருஷ்’ என்றும் தன்கர் வர்ணித்தார்.
நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கடந்த நூற்றாண்டின் மகாபுருஷ் (மகன்) மகாத்மா காந்தி. நரேந்திர மோடி இந்த நூற்றாண்டின் யுக்புருஷ் (சகாப்தத்தின் நாயகன்)” என்று அவர் கூறினார்.
சத்யாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி, நாம் எப்போதும் செல்ல விரும்பிய பாதைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார் என்று தன்கர் தெரிவித்தார்.
இந்த இரண்டு பெரிய ஆளுமைகளான மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே ஒரு விஷயம் பொதுவானது. அவர்கள் ஸ்ரீமத் ராஜ்சந்திராஜியின் மரியாதையுடன் பிரதிபலித்தனர் என்றும் ஜக்தீப் தன்கர் கூறினார்.