பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் உள்ளிட்ட 2,222 காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் போட்டித்தேர்வு வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், நவம்பர் முதல் 30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி, டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விண்ணப்பதாரர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.