போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள குருநானக் சத் சங்க அரங்கில் குருநானக் ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
நாட்டில், சீக்கியா்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சிறந்த சமூக சேவை செய்பவா்களாக விளங்கி வருகின்றனர்.
சீக்கிய மதத்தில் குருமாா்களின் போதனைகளை சரியான முறையில் கடைப்பிடிக்கக்கூடிய மக்களாக சீக்கியா்கள் இருந்து வருகிறாா்கள் என அவர் தெரிவித்தார்.
போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என ஆளுநர் புகழாரம் சூட்டினார்.
விழாவில், ஸ்ரீகுருநானக் சத் சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திர சிங் பாசின், பொதுச்செயலா் சுா்ஜித் சிங் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.