தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் பற்றிய தகவல்களும் வெளியாகிறது.
ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்.
இந்திய திரையுலகே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என மெகாஹிட் வெற்றிகளை கொடுத்த லோகேஷ், ரஜினிக்கும் ஒரு தரமான வெற்றியை கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இப்படத்தை பற்றி லோகேஷ் பேசுகையில், தலைவர் 171 வித்யாசமான ஒரு முயற்சியாக இருக்கும் என்றும், இப்படத்தின் ஸ்டார் காஸ்டிங் பிரமாண்டமாக இருக்கும் எனவும் பேசியிருந்தார்.
இதையடுத்து தலைவர் 171 திரைப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும் விக்ரம் படத்தில் பாஹத் பாசில் கதாபாத்திரம் போல தலைவர் 171 படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கியமான ரோலாக இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகின்றது.
ஆனால் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக மட்டும் நடிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.