தமிழகத்தில் மிகச்சிறந்த மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹெச்.வி.ஹெண்டே. இவரது எழுத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
குறிப்பாக, இராமாயணம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர், கடந்த 1967 மற்றும் 1971 -ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், சென்னை பூங்கா நகர் தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றி பெரும் சாதனை படைத்தார்.
சென்னை அண்ணாநகர் தொகுதியில், கடந்த 2006 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில், டாக்டர் ஹெச்.வி.ஹெண்டே, இன்று தனது 97 -வது பிறந்த நாளை வெகு உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்குத் திரைப்பட நடிகர்கள் பிரசாந்த், கரண், நடிகை ரேகா நாயர் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், அரசியல் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் பொன்னாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் ஆசி பெற்றனர்.
அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, டாக்டர் ஹெச்.வி. ஹெண்டே-வின் நினைவுகளை அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.