உத்தரகாசி சுரங்கத்திற்குள் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்புப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். சுரங்கத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்பூலன்ஸ்கள் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்திற்கு உள்ளே எடுத்து செல்லப்படுகிறது ராணுவ வீரர்கள், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க் யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற நிலையில் இருந்த சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள சாலை சீரமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சீராக செல்ல சாலைகளில் மண் போடப்பட்டுள்ளது.
மேலும் தொழிலளார்களை வரவேற்கும் விதமாக மாலைகள் உள்ளிட்டவை சுரங்கத்திற்குள் எடுத்து செல்லப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தயார் நிலையில் உள்ளனர்.