முல்லைப்பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த முல்லைப்பெரியாறு நீர்தேக்கம் அருகே கேரளா கார் பார்க்கிங் அமைத்துள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடத்தால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிப்பதாக இருப்பதாக வனத்துறை புகார் தெரிவித்தது.
இதனையடுத்து, முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்க 2013ஆம் ஆண்டில் கேரள அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்க கேரள அரசு தேர்வு செய்துள்ள இடம் தமிழக அரசுக்கு ஒப்பந்தத்திற்கு அளித்துள்ள நிலம் என்றும், எனவே, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1886ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்ட இடத்தில்தான் கார் பார்க்கிங் கட்டப்பட உள்ளதா என சர்வே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.