இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயண டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கே கோப்பை உறுதியாகிவிடும்.
இந்நிலையில் இன்று போடப்பட்ட டாஸில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் , இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்,
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
மேத்யூ வேட் (கேப்டன்), மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, டிராவிஸ் ஹெட்