உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர். அவர்களை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றனர்.
முதலுதவி சிசிச்சைக்கு பின் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும் தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரகாசியில் எங்கள் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கப்போகிறது.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.