உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார்.
அப்போது “உத்தரகாசியில் உள்ள எங்கள் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றியால் நான் வியப்படைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியத்தாலும் பொறுமையின் காரணமாகவும் நீங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
“நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, எங்களின் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினர் குறிப்பிடத்தக்க பொறுமையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் மரியாதைக்கும் நன்றிக்கும் தகுதியானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சோதனையைத் தாங்கிய தொழிலாளர்களின் தைரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்த மீட்புப் படையினரின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
மேலும், தொழிலாளர்களின் நிலை மற்றும் நலன் குறித்தும் உத்தரகாண்ட் முதல்வரிடம் விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.