தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான டாக்டர் ஹண்டேவின் 96-வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், டாக்டர் ராஜ்குமார் எழுதிய நெஞ்சில் நிலைத்த நாயகர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்த விழாவிற்கு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன், மராட்டிய வீர சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார், வீரவாஞ்சிநாதன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தீர்த்தகிரி முதலியார் ஆகியோரின் நேரடி வாரிசுகள் கலந்து கொண்டனர்.
விழாவில், டாக்டர் இரவீந்திரன் வரவேற்புரையாற்றினார். சாய் சுதாகர் நன்றியுரையாற்றினார். நிறைவாக, விழாவில், டாக்டர் ஹண்டே ஏற்புரை நிகழ்த்தினார். டாக்டர் ஜகத் குரு ஆத்ம சைதன்ய குருஜி அருளாசி வழங்கி வாழ்த்தினார்.
ஹண்டே பிறந்த நாளையொட்டி, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து மழை பொழிந்தனர்.