மியாவாக்கி முறை குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அந்தப் பகுதி இளைஞர்களுடன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ராம்நாத் அவர்கள் வித்யாவனம் என்ற பெயரில், அவரது பள்ளியில் மியாவாக்கி குறுங்காடு அமைத்திருந்ததை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டி, அனைவரும் இது போன்ற குறுங்காடுகள் அமைக்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ராம்நாத் அவர்கள் வித்யாவனம் என்ற பெயரில், அவரது பள்ளியில் மியாவாக்கி குறுங்காடு அமைத்திருந்ததை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டி, அனைவரும் இது போன்ற குறுங்காடுகள் அமைக்க… pic.twitter.com/fZf35svnNl
— K.Annamalai (@annamalai_k) November 28, 2023
பிரதமர் மோடி அறிவுரையைத் தொடர்ந்து, இன்றைய தினம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி பாலத்தளி கிராமத்தில் 284 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடமாங்கல் ஏரியில், மியாவாக்கி முறை குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அந்தப் பகுதி இளைஞர்களுடன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த கடமாங்கல் ஏரிக்கு, பல வகையான வெளிநாட்டுப் பறவைகள், பருவகாலங்களில் வருவது வழக்கம். இந்த ஏரியில் இருந்த காட்டு கருவை மரங்கள் வெட்டப்பட்டபின், பறவைகளின் வரத்து குறைந்துவிட்டது.
இதை மீண்டும் சரிசெய்ய பாலத்தளி கிராம இளைஞர்கள் முன்னெடுத்துள்ள மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் மகத்தான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.