சென்னையில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டு மேளா நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல், கொட்டும் மழையில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பில், தமிழக அரசின் பொதுப் பணித்துறைக்கு ஒப்பந்தம் மூலம் மின் சாதனங்களை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர் வீடு உள்ளது.
அதேபோல, புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதே வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை அடுத்து, திமுக பிரபலங்கள் மற்றும் ஆதரவு அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.