இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓடிசா மாநிலம், மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இதனால், இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் ஓடிசாவில் வாக்களித்து வந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவராக, திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது முகவரி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, குடியரசுத் தலைவரின் வசிப்பிடம் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் நேரில் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு டெல்லியில் வாக்களிக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனால், குடியரசுத் தலைவராக இருக்கும் காலம் வரை அவர் டெல்லியில் வாக்களிப்பார் என தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.