புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என பல்வேறு நாடுகள் தடை போட்டும் வரும் நிலையில், நியூசிலாந்தில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியானத் தொழிலாளர் கட்சியைவிட, தேசிய கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சியின் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
கிறிஸ்டோபர் பிரதமர் பதவி ஏற்கும்போது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். கடந்த அரசு புகையிலைக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.
அதுவும், சிகரெட்டில் குறைந்த அளவு நிக்கோடின், சில்லரை விற்பனை குறைப்பு, இளைஞர்கள் புகைப்பிடிப்பதற்கு வாழ்நாள் தடை போன்றவை அடங்கும். அவை அனைத்தும் நீக்கப்படும் என்றார்.
புகை பிடிக்கும் தடை சட்டத்தை அரசு நீக்கிய விவகாரம் அந்நாட்டில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.