டிசம்பர் 2-ஆம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் மாதம் 02-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்.