பஞ்சாப் எல்லையில், எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அமிர்தசரஸ் மாவட்டம் ரனியன் கிராமத்தின் புறநகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாய நிலத்தில் இருந்து ஹெராயின் என சந்தேகிக்கப்படும் இரண்டு பாக்கெட்டுகள் (மொத்த எடை, 1 கிலோ) கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய் போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் எல்லையில் உள்ள சக் அல்லா பக்ஷ் கிராமத்தில் 5.240 கிலோ ஹெராயின் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.