புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி, புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், 3 ஆயிரத்து 300 மி.கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 74 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 400 கன அடியாக உள்ளது.
புழல் ஏரியிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 9:30 மணியளவில் அது 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
புழல் ஏரியில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோரப் பகுதிளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது