கோவை போத்தனூர் அருகே ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான டூல் பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறன.
இந்த தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள், வழக்கம் போல் அட்டைப் பெட்டிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த போது மிகவும் கொடிய விஷம் உடைய 3 அடி நாகப்பாம்பு ஒன்று அட்டை பெட்டியில் சீறி வெளியேறியது. ஆனால், நாகப் பாம்பு அட்டை பெட்டியில் உள்ள பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகன் குமார், அட்டை பெட்டியில் ஒட்டியிருந்த பாம்பை, லாவகமாகப் பிடித்து டேப்பிலிருந்து லாவமாக விடுவித்தார்.
இதனால், டேப்பில் தலை சுற்றி நகர முடியாமல் போராடிய நாகப் பாம்பு, அதிலிருந்து விடுபட்டது. பின்னர் அதனை வனப் பகுதியில் பத்திரமாகக் கொண்டுபோய்விட்டனர்.