இந்தியாவில் முதன்முறையான பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 -ம் தேதி கடைசி நாள் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவு தேர்வாகும். இது முதன்மை மற்றும் மேல் நிலை என 2 முறைகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டுக்கான JEE முதல்கட்ட தேர்வு ஜனவரி மாதம் 24 முதல் பிப்ரவரி மாதம் முதல் தேதி வரை நடக்கிறது.
தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் JEE நுழைவுத் தேர்வுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் 2024 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.