நடிகர் விஜய்சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருபவர் தான் விஜய் சேதுபதி.
இவர் ஹீரோவாக நடித்து ஹிட் ஆனா படங்களை விட வில்லனாக நடித்து ஹிட் ஆனா படமே அதிகம் என்று சொல்லலாம். இவரின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.
இவர் சமீபகாலமாகவும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார். இதனால் நிறைய படங்களில் வில்லனாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் வில்லனாக நடிக்க அழைப்புகள் வந்தன.
சமீபத்தில் இந்தியில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் ‘இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன்’ என விஜய்சேதுபதி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர், “வில்லனாக நடிப்பதில் நிறைய அழுத்தங்கள் உள்ளன. ஹீரோவைவிட வலுவாக தெரிந்து விடக்கூடாது என்று கவனித்து நடிக்க வைப்பார்கள். வில்லனாக நான் நடித்த நிறைய காட்சிகளை நீக்கியும் இருக்கிறார்கள். இதனால் இனிமேல் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன் ” என்று கூறியுள்ளார்.
இது அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.