குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவை! - பிரதமர் மோடி
Mar 15, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவை! – பிரதமர் மோடி

பாபா தாமில் 10,000ஆவது மக்கள் மருந்தகம் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தியோகரில் மக்கள் மருந்தக மையத்தை நடத்துபவர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவையாகும் எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று வளர்ச்சியடைந்த இந்தியா சபத  யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆவது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார்.

மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000ஆக உயர்த்தும் திட்டத்தையும் மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்குதல், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000ஆக உயர்த்துதல் ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

தியோகரில் உள்ள எய்ம்ஸ் மக்கள் மருந்தகப் பயனாளி மற்றும் மருந்தகத்தைத் தொடங்கியுள்ள ருச்சி குமாரியுடன் பிரதமர் கலந்துரையாடலைத் தொடங்கினார். 10,000ஆவது மக்கள் மருந்தக மையத்தைத் தொடங்கியதற்காகப் பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாபா தாம் தியோகரில் இந்த மைல்கல் எட்டப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மக்கள் மருந்தக மையம் அமைக்கும் முடிவு குறித்து ருச்சி குமாரியிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது ஏழை, நடுத்தர மக்களுடனான தனது உரையாடலை விவரித்த அவர், சந்தையில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் மருந்து பெரும்பாலும் 10 முதல் 50 ரூபாய்க்கு மக்கள் மருந்தகத்தில் கிடைப்பதால் குறைந்த விலை மருந்துகளின் தேவையைத் தீவிரமாக உணர்ந்ததாகக் கூறினார்.

இப்பகுதியில் மக்கள் மருந்தக மையங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து தாம் உணர்ந்ததாகவும், இதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து ருச்சி தெரிவித்தார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மக்கள் மருந்தக மையங்களின் பயனாளி சோனா மிஸ்ரா, மக்கள் மருந்தக மையங்களில் குறைவான விலையில் மருந்துகளை வாங்குவதன் மூலம் மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாயை சேமிக்க முடிந்தது என்று பிரதமரிடம் தெரிவித்தார்.

மக்கள் மருந்தக அனுபவங்கள் குறித்து கடையில் ஒரு பலகை வைக்குமாறு  மிஸ்ராவைப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் குறைவான விலையில் மருந்துகள் கிடைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தத் திட்டங்கள் பற்றி உள்ளூர் மக்களுக்குத் தெரியும் என்பது குறித்துப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். “தரமான, குறைந்த விலை மருந்து விற்பனை ஒரு பெரிய சேவை” என்றும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Next Post

காங்கிரஸ் திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாரத மாதாவுக்கு வழங்கும் மரண மாத்திரை!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies