தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் 2 -ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட புயல், 3 -ம் தேதி உருவாகிறது என்றும், வங்கக்கடலில் உருவாகும் புயல் வட தமிழ்நாட்டை நோக்கி வரும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் டிசம்பர் 2 -ம் தேதி மற்றும் 4 -ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் டிசம்பர் 3-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, டிசம்பர் 4 -ம் தேதி அன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.