நாட்டின் கடலோரப் பாதுகாப்பு, கடல்சார் திறன்களை மேம்படுத்த இந்திய கடலோரக் காவல்படை அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் 2023, நவம்பர் 30, அன்று 40 வது கடலோர காவல்படை தளபதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அப்போது பேசியவர், தேடல், மீட்பு மற்றும் மாசு தடுப்புத் துறையில் முன்னணியில் இருப்பதன் மூலம் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக இந்தியக் கடலோர காவல் படையைப் பாராட்டினார். கடல்சார் திறன்களை மேம்படுத்த இந்திய கடலோரக் காவல்படை அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
“இந்திய கடலோரக் காவல் படை, தொடங்கப்பட்டதிலிருந்து, அனைத்து சூழ்நிலைகளிலும் கடல்சார் பணிகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு மகத்தான சேவையை வழங்கியுள்ளது” என்று கூறினார். தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியக் கடலோரக் காவல் படையின் தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள், செயல்பாட்டு தலைமை தயார்நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து இயக்குநர் ராகேஷ் பால் பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கினார்.
சமகால கடல்சார் சவால்களை எதிர்கொள்வது, நாட்டின் கடலோரக் கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்துவதை இந்த மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.