கேரளாவில் வருகிற 4-ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று மாநிலத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் வருகிற 4-ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.