4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசம், இராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடகியது.
9 மணி நிலவரப்படி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக 119 இடங்களிலும், காங்கிரஸ் 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இராஜஸ்தானில் பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை விகிக்கின்றன.
தெலுங்கானாவில் பாஜக 5 தொகுதிகளிலும், பிஆர்எஸ் 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. மற்ற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.