இராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் பெறவேண்டும்.
கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகள் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளில் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளது என்பது வரலாறு.
தற்போது, அசோ கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில், மொத்தமுள்ள 199 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலிலும் காங்கிரஸ் – பாஜக இரு கட்சிகளுக்கு இடையே கடும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 85 இடங்களிலும், பாஜக 103 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெற்று வரும் நிலையில், பாஜக-வே மீண்டும் ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.