தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில், டிசம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இங்கு கடந்த 9 ஆண்டுகளாக பாரதிய ராஷ்டிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ், அம்மாநில முதலமைச்சராக இருந்து வந்தார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும்
பாரதிய ராஷ்டிய சமிதி கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக களம் இறங்கியது. மேலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.
இந்த நிலையில், முதல்கட்ட நிலவரப்படி, அதாவது காலை 10 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 64 இடங்களிலும், பாரதிய ராஷ்டிய சமிதி கட்சி 41 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதனால், ஆட்சியைப் பிடிப்பதில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ராஷ்டிய சமிதி கட்சி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.