ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
ஐ.நா. வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாகவும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம உரிமையை வழங்குவதற்கு, நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும் அது அறிவுறுத்துகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள், நீடித்த வளர்ச்சி மற்றும் இலக்குகளை அடைய மாற்றுத்திறனாளர்களுக்கு, அவர்களுடன் இணைந்து அவர்களே செயலாற்றி, அதை அடைய வேண்டும் என்பதாகும்.
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக, பாரத பிரதமர் நரேந்தி மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.