இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுவேன் என்று மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்து சாதனை படைத்தவர் தான் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா.
இவர் மொத்தமாக மேற்கிந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார்.
பிரைன் லாரா ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், விராட் கோலி மாதிரி விளையாட வேண்டும் என்று கூறுவேன். மேலும் கோலியின் அர்ப்பணிப்பையும் வலிமை மட்டும் இல்லாமல், நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவேன் ” என்று கூறியுள்ளார்.