தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் இடையிடையே கனமழை பெய்து வருகிறது.
02-ஆம் தேதி காலை 8:30 முதல் இன்று காலை 5:30 வரை, தமிழகத்தில் மழைப்பொழிவு (மிமீ) பதிவான விவரம். சேலம், திருச்சிராப்பள்ளியில் லேசான மழைப்பொழிவு இருந்தது.
சென்னை மீனம்பாக்கத்தில் 71.2 மிமீ மழையும், புதுச்சேரியில் 26 மிமீ மழையும், கடலூரில் 22 மிமீ மழையும், காரைக்காலில் 19 மிமீ மழையும், திருத்தணியில் 11 மிமீ மழையும், வேலூரில் 10 மிமீ மழையும், நாகப்பட்டினத்தில் 9 மிமீ மழையும், அறந்தாங்கியில் 0.7 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.