தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சனி குமார் தேர்தல் நடைமுறைவிதிகளை மீறியதாகக் கூறி, அவரைச் சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. பிஆர்எஸ் 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியை, அம்மாநில டிஜிபி அஞ்சனி குமார் நேரில் சென்று சந்தித்து பொக்கே கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியை, அம்மாநில டிஜிபி அஞ்சனி குமார் நேரில் சென்று சந்தித்தற்காக, அவரைத் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
மேலும், சஞ்சய் ஜெயின் மற்றும் மகேஷ் பாகவத் ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
டிஜிபியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.