மிக்ஜாம் புயல் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் பகுதிகளுக்குச் சென்று, உணவளிக்கும் பணியில் கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் 5-ஆம் தேதி ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால், கடந்த 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் சூழந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் அம்சாநகர் குடிசைப்பகுதியில் வசிக்கும் 400 பேருக்கும், மணவாளநகர் இருளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 400 பேருக்கும், மீரா திரையரங்கம் சாலையோரத்தில் வசிக்கும் 200 பேருக்கும், கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கினர்.