மிக்ஜாம் புயல் காரணமாக மழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரனை என பெரும்பாலான பகுதிகளில் தற்போது வரை வெள்ள நீர் வடியவில்லை. சாலைகள் சேதமடைந்ததுடன், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் பால் மற்றும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், மீட்பு படையினர், காவல்துறையினர், களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மழை ஓய்ந்த நிலையிலும் வெள்ள நீர் வெளியேற்றம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தின் காரணமாக சென்னையில் 6 பேர் உயிரிழந்ததாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.