மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய பெய்த பெருமழை பொது மக்களுக்கு மரண பயத்தை காட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழைவெள்ளத்தில் தத்தளித்து வருகின்றது.
குறிப்பாக, பொது மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ராயபுரத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சாலைகளில் திரண்டு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த வழியாகச் சென்ற கார், பைக், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்க பகுதியில் ஆவின் பால் கூட கிடைக்கவில்லை. இதனால், குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். நாங்க பசியை தாங்கிக்குவோம். குழந்தைகள் தாங்குவாங்களா.
ஆனால், பொது மக்களுக்கு எல்லாம் செய்து வருகிறோம் என திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது என குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.